குழந்தைகளுக்கான இயற்கை சார்ந்த, பறவைகள் குறித்த விளையாட்டுக்களையும், செயற்பாடுகளையும், இங்கே காணலாம். இவற்றை குழந்தைகள் தனியாகவோ, சிறு குழுவாகவோ, வகுப்பறைகளிலோ விளையாடலாம். இந்த விளையாட்டுக்களை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
பறவைகள் வாயிலாக இயற்கை குறித்த புரிதலை குழந்தைகளுக்கு பல படைப்புகளையும் (விளையாட்டு அட்டைகள், கையேடுகள்), பயிற்சியையும், கருத்தரங்குகளையும் இந்தத் திட்டம் அளிக்கிறது. இந்த படைப்புகளை வாங்கி அவற்றை பயன்படுத்துவதன் மூலம் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்கு நீங்கள் உதவி புரிவது மட்டுமல்லாமல், நீங்களே ஒரு பறவை/இயற்கை கல்வியாளராக ஆகிறீர்கள்.
உங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் எங்களது Facebook, Twitter, Instagram, Youtube பக்கங்களிலோ அல்லது மின்னஞ்சல் (email) அனுப்பியோ பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்தியப் பொதுப்பறவைகள் – பறவைப் பட அட்டைகள்
பறவைகளின் ஒளிப்படங்கள் ஒரு பக்கத்திலும், மறுபக்கத்தில் அவற்றைப் பற்றிய சுவையான, வியக்க வைக்கும் தகவல்களையும், விளக்கங்களையும் கொண்ட விளையாட்டு அட்டைகள். குழந்தைகளுக்கும், ஆரம்ப நிலை பறவை ஆர்வலர்களுக்கும் வீட்டுக்குள், வகுப்பறைக்குள் விளையாடவும் அதே வேளையில் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் இந்த விளக்கப் பட அட்டைகள் உதவும். என்னென்ன விளையாட்டுகள் ஆடலாம், எப்படி விளையாடுவது என்பதற்கான வழிமுறைகளைக் கொண்ட காணொளிகளை இங்கே காணலாம் அல்லது இங்கே பதிவிறக்கம் செய்யலாம் .

குறுங்கையேடுகள்
ஆங்கிலத்திலும், பல இந்திய மொழிகளிலும் உள்ள இந்த பொதுப் பறவைகளின் கையடக்க குறுங்கையேடுகளை, பறவை நோக்கலின் போது எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். கெட்டியான அட்டையும், வழவழப்பான தாளும் கொண்ட இக்குறுங்கையேடுகளில் உள்ள விளக்கப்படங்கள் பறவைகளை எளிதில் அடையாளம் காண உதவும். இவற்றை வாங்க இங்கே சொடுக்கவும் , 50 அல்லது அதற்கு மேல் குறுங்கையேடுகள் வாங்கி தள்ளுபடி விலையில் வாங்க இங்கே சொடுக்கவும் .

நீங்களும் ஓர் இயற்கை துப்பவறிவாளர்
புறவுலகின் விந்தைகளை தேடிக் கண்டறிய குழந்தைகளுக்கு ஒரு சரியான விளையாட்டு இது.

பறவைகளின் வாழ்க்கை – ஓர் விளையாட்டு
பறவையாய் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை இந்த விளையாட்டினை ஆடினால் நாமாகவே தெரிந்து கொள்ளலாம். வீட்டுக்குள்ளே, வகுப்பறைக்கு உள்ளே அல்லது வெளியே என எங்கு வேண்டுமானாலும் ஆடலாம்.

நம்மைச் சுற்றியுள்ள பறவைகள்
இந்த விளக்கச் சுவரிதழில் இந்தியாவில் பொதுவாகத் தென்படும் பறவைகளைக் காணலாம். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் குரலொலியையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் . உங்கள் வீட்டில், பள்ளியில் மாட்டி வைக்க விருப்பமிருந்தால் பெரிய வடிவில் இச்சுவரிதழை இங்கே வாங்கிக் கொள்ளலாம் .

நீர்ப்பறவைகள்
இந்த விளக்கச் சுவரிதழில் இந்தியாவில் தென்படும் நீர்ப்பறவைகளைக் காணலாம். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் குரலொலியையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் . உங்கள் வீட்டில், பள்ளியில் மாட்டி வைக்க விருப்பமிருந்தால் பெரிய வடிவில் இச்சுவரிதழை இங்கே வாங்கிக் கொள்ளலாம் .

வனப்பறவைகள்
இந்த விளக்கச் சுவரிதழில் இந்திய காட்டுப்பகுதிகளில் தென்படும் பறவைகளைக் காணலாம். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் குரலொலியையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் . உங்கள் வீட்டில், பள்ளியில் மாட்டி வைக்க விருப்பமிருந்தால் பெரிய வடிவில் இச்சுவரிதழை இங்கே வாங்கிக் கொள்ளலாம் .

புல்வெளி & வயல்வெளிப் பறவைகள்
இந்த விளக்கச் சுவரிதழில் இந்தியாவில் உள்ள புல்வெளி & வயல்வெளிப் பகுதிகளில் தென்படும் பறவைகளைக் காணலாம். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் குரலொலியையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் . உங்கள் வீட்டில், பள்ளியில் மாட்டி வைக்க விருப்பமிருந்தால் பெரிய வடிவில் இச்சுவரிதழை இங்கே வாங்கிக் கொள்ளலாம் .

நம்மைச் சுற்றியுள்ள பொதுப்பறவைகள்
இந்த விளக்கச் சுவரிதழில் இந்தியாவில் உள்ள மனிதர்கள் வாழும் பகுதிகளில் தென்படும் பறவைகளைக் காணலாம். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் குரலொலியையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் . உங்கள் வீட்டில், பள்ளியில் மாட்டி வைக்க விருப்பமிருந்தால் பெரிய வடிவில் இச்சுவரிதழை இங்கே வாங்கிக் கொள்ளலாம் .

புள்ளிகளைச் சேர்த்து பறவையை கண்டு பிடியுங்கள் – சின்னான்
புள்ளிகளை கோடிட்டு இணைத்து வரைவதன் மூலம் பறவையை அடையாளம் காண உதவும் ஒரு எளிமையான செயற்பாடு.

புள்ளிகளைச் சேர்த்து பறவையை கண்டு பிடியுங்கள் – மீன்கொத்தி
புள்ளிகளை கோடிட்டு இணைத்து வரைவதன் மூலம் பறவையை அடையாளம் காண உதவும் ஒரு எளிமையான செயற்பாடு.

நாட்டுப்புற ஓவியக்கலையில் பறவைகளை வரையலாமா?
காட்டு வாலாட்டியின் வரைபடத்தில், நாட்டுப்புற ஓவியக்கலையின் வடிவங்களை பயன்படுத்தி உங்களுடைய கற்பனையைக் காட்டி

பறவைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்
நீங்கள் ஆரம்ப நிலை பறவை ஆர்வலரா? பறவைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறீர்களா? இந்தக் காணொளிகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.